தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி Mother Fiverose Trust ன் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரெய்லி கண்காட்சி மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் K.B பிரம்ம நாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ரா. சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் திரு. மெயகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ மாணவிகள் Teachers கலந்து கொண்டனர். இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே. சுகுமாரன் அவர்களுக்கும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் சமூக ஆர்வலர் DR. S.முகமது இலியாஸ் B. A., அவர்களுக்கு Best Social Service Award வழங்கப்பட்டது. தொடர்ந்து டிரஸ்டி Dr. முகம்மது நஸிர் பிஸியோதெரபிஸ்ட் அவர்கள் பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்ததை பற்றி சிறப்புரையாற்றினார...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !