தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்
. ----------- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.03.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக நோய் தடுப்புத்துறை தலைவர் மரு.சுனிதா அவர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறித்து விரிவாக எடுத்து கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இதுவரை 6,70,000 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்கள பணியாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல...