முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 18, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு

 2021-2022 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான       (UYEGP)    (PMEGM)  வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், (Pஆநுபுஆ) பராத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டம், ஆவின் திட்டங்களுக்கு சிறப்பு முகாம் வருகின்ற 25.03.2022 அன்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் ககலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

  தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் ------------- தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.03.2022) துவக்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக 4 மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 1,10,200 கால்நடைகள் கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து 40 நாட்களுக்குள் 1,10,200 கால்நடை...