சமீபத்தில் தொடுவானம் கலை இலக்கிய பேரவை சார்பில் நூல் வெளியீட்டு நிகழச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு... நிகழ்ச்சியை பற்றி எழுத்தாளர். முத்தாலங்குறிச்சி காமராசு பெருமிதத் தோடு கூறியது .... தூத்துக்குடியில் இயங்கி வரும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை மிக முக்கிய அமைப்பாகும். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை தேவன் ஆவார். எனக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடமாக பழக்கம். சிறந்த எழுத்தாளர். நான் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற போது எனக்கு கோவில்பட்டியில் வைத்து பாராட்டு விழா நடத்தும் போது அவருக்கும் பாராட்டு சான்றிதழ் கொடுத்தார்கள். அப்போது தான் முதல் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் அடிக்கடி பேசிக்கொள்வார். அவர் மாதந்தோறும் நடந்தும் தொடுவானம் நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அதன் பின் புத்தக கண்காட்சியில் இணைந்தோம். தொடர்ந்து தூத்துக்குடி சிறுகதை எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியிலும் ஒருங்கிணைந்தோம். இ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !