இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு - சமூக வலைதளங்களில் ஜாதி, மதக் கலவரத்தையோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்தியையோ பரப்புவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !