தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அங்கு இறந்து கிடந்தவர் 1 ஆம் கேட் அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் செல்வம் (43) எனத் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மாரியம்மாள் (36) என்ற மனைவியும் நாகலட்சுமி (15), சுந்தர் (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி அலங்காரதிட்டு பகுதியில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர். நேற்று வரை பட்டறையிலேயே தங்கி வேலை பார்த்து வந்து உள்ளார். தனது மனைவியிடம் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேசி உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !