நாள்:30.03.2023 தூத்துக்குடி மாவட்டம் தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற செல்வி.ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களை இன்று (30.03.2023) சந்தித்து, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு.ராகவானந்தம் (தந்தை), திருமதி.ரா.மாலதி (தாய்) ஆகியோரது மகள் செல்வி ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !