தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். ---------------- தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை திறந்து வைத்தார். மேலும் குப்பைகளை எடுத்து வர பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகன பணிகளை துவக்கி வைத்தார். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !