தூத்துக்குடியில் புரோட்டா கனட உரிமையாளர் கொலை : குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய எஸ்.பி . உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம்; வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ஒருவர் கொலை - சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று விசாரணை. தூத்துக்குடி மாவட்டம், வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில், தூத்துக்குடி ஆரோக்கியபுரம், யு. சண்முகபுரத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் வாழ்வாங்கி (28) என்பவர் 31.10.2020 அன்று கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவில் உள்ள தனக்கு சொந்தமான புரோட்டா கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது, மர்ம நபர்களால் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். அவரை அக்கடையில் வேலை பார்ப்பவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே வாழ்வாங்கி இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...