திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (07.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்பேசியதாவது: திருச்செந்தூர் பேரூராட்சிக்கென குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2.10 எம்எல்டி நீர் திரு...