செவ்வாய் 15, மார்ச் 2022 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடியில், 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் கே.சக்கரவர்த்தி, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர் பீமல்குமார், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மூத்த வர்த்தக துணை மேலாளர் பிரசன்னா, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், இந்திய துறைமுக ரயில் கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ் பாபு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறியதாவது "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !