முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 31, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவல் துறை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐ.ஜி ஆலோசனை

. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.    31.08.2020.  காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் மதுரை, தென்மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வக்கூட்டத்தின்போது திருநெல்வேலி டி.ஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி மாவட்;ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மற்றும் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், திரு. கோபி; ஆகியோர் உடனிருந்தனர்.  இக்கூட்டத்தில்  தூத்துக்குடி  மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன், இ.கா.ப  அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட...

108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். என திட்ட மேலாளர் தகவல். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்கள் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.  தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  மருத்துவ உதவியாளர் பணிக்கு 18 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., மற்றும் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகளான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக், பயோகெமிஸ்டரி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  ஓட்டுநர் பணிக்கு 24 வ...

" திருக்குறளை " மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10000- பரிசுத்தொகை

  தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10000- பரிசுத்தொகை வழங்கப்பட்டும,; என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தகவல். ------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10000- பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர். மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பதோடு குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத...

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தகவல்

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு                               தமிழ் வளர்ச்சித் துறையில் 2020-21ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் தகவல். -------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் வளர்ச்சித் துறையில் 2020-21ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.2500- மற்றும் ரூ.500- உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் 01.01.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன், வயதுச்சான்று, ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் வட்டாட்சியரிமிருந்து வருமானச் சான்று, தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று மற்றும் இதர விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் து...