வேட்புமனு தாக்கல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் கோவில்பட்டி மெயின் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கர நாராயணனிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கடம்பூர் ராஜூவின் மனைவி இந்திரா காந்தி மனு தாக்கல் செய்தார். ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !