முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

http://சிறு கதைகள்

 

வரன் தேடி

தெருவில் சரிபாதியான இடத்தில் வேனை நிறுத்தி காய்கறி, பழ வியாபாரம் பண்ணிக் கொண்டு இருந்தார் சிவசைலம் மாமா.

வாரா வாரம் சரியாக நாலு மணிக்கு வாசலுக்கு வரும் வேன் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகும்.


பக்கத்து தோட்டம் அவருக்கு. மனைவி பணம் வாங்கி, காய்கறி கணக்கு பார்த்து சொல்லுவாள். 

தெருவே கூடிவிடும். 

அன்று பின்னால் ஒரு இண்டிகோ காரும் நின்றது சரணுக்கு ஆச்சரியம்.காரில் வரும் அளவு வசதி படைத்த உறவு யாரும் இல்லை. 

இறங்கியவர்கள் முகத்தில் தயக்கம்.

"இங்க ராமனாதன்னு. மாஜிஸ்ட்ரேட் கோர்ட் ஹெட் க்ளார்க் வீடு"என்று விசாரித்தார் மத்திய வயது கடந்தவர்.

சரண் சந்தேகம் தீர்ந்தது.

"நாலு வீடு தள்ளி. அதோ வாசலில் குழாய் இருக்கே. அந்த வீடுதான்"என்று சரண் சொல்லி முடிப்பதற்குள் குரியர் ஆபீஸ் போன அப்பா வந்து விட்டார்.

 "யாராம்"                                                         என்று சைகையால் சரண்யாவிடம் கேட்டார்.

"ஒரு பத்து நிமிஷம் உள்ளே உட்கார்ந்து பேசலாமா?"

"தாராளமா"என்ற அப்பா வின் பேச்சில் மகிழ்ந்தனர்.

சஃபாரி போட்ட பையன் அழகாக இருந்தான். சந்தன நிறம்.கூட வந்த இருவரும் அத்தனை வசதி மாதிரி தெரியவில்லை.

"அம்மாவை காபி போடச் சொல்லிவிட்டு நாலு சேர்களை எடுத்து போடச் சொன்னார்"

"என்ன விஷயம்?"

சரண் பதில் சொன்னாள்.

"ராமனாதன் மாமா ரெண்டாவது பெண்ணை பார்க்க வந்தவாளா இருக்கும். பத்து நிமிஷம் கழித்து நல்ல நேரமோ என்னமோ?"

ராஷ்மிகா பந்தனா("சுல்தான்"பட நாயகி மாதிரி ஒல்லியாக, சிவப்பாக, சிரிக்கும் கண்களுடன் இருந்த பெண் துல்லியமாக கணித்து சொல்லியது)

"ரொம்ப சரி.இது"

"பையன் என்ன பண்ணறார்?"சரண் அப்பா. 

"பையன் இல்லை "

"அப்போ பெண்ணா. இடிக்கிறதே?"

"இல்லை என் அக்கா பையன்.நாங்க மாமா மாமி.இது என் பெண். மூன்று பேரா போகக்கூடாது இல்லையா?

"நாலு வீடு தள்ளி போகலாமா"என்று சரண் மெல்லிய குரலில் சொன்னது சஃபாரி காதில் விழுந்து விட்டது.

"நீங்கள் எங்கே இருந்து வர்ரேள்"

"தென்காசி பக்கம் "

"பிராப்பர் தென்காசியா "

"இல்லை.மேலகரம். இப்போது இருக்கிறது தென்காசி"

"மாப்பிள்ளை என்ன பண்ணறார் "

"பேங்க் ஆபீசர்"

"எம் காமா?"

"எம் இ"

"என்னது படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை "

"அது அந்தக் காலம்.பொண்ணு எப்படி?"

"நல்லா பாடுவா "

நாம என்ன கச்சேரியா நடத்தப் போறோம்"என்ற மாமாவின் பதில் ரசிக்கப்படவில்லை.

ஐந்து நிமிடத்தில் சரணின் படிப்பு, வேலை எல்லாம் பகிரப்பட்டது. 

"ஆபீசர் ஆக ஆசை இல்லையா?"

"வர்றப்போ வரட்டும் என்ற சரண் பதில்"அனைவருக்கும் பிடித்து இருந்தது. 

அவர்கள் பேசி முடித்து கிளம்பும் முன் சரண் அம்மாவிடம் சொல்லிவிட்டு வெளியேறினாள்.

அவர்களுக்கு தெரியாது.

அவர்கள் பார்க்க வந்த பெண் ராதிகாவும், சரண்யாவும் பல வருடத் தோழிகள் என்று. 

  இங்கே ஆட்கள் தேடிக்கொண்டு இருக்கும் போது பூனை போல ராதிகா ரூமில் நுழைந்து அழகு படுத்த ஆரம்பித்தாள்.

தன்னை வெளிக்காட்டாமல் மாடி ரூம் ஜன்னலில் இருந்து ஹாலில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான தருணங்கள்.

"தனியாக பேச வேண்டுமா"என்ற பெண்ணின் அப்பா கேள்வி ராதிகாவுக்கு படபடப்பைக் கூட்ட "வேண்டாம்"என்ற பையனின் மறுப்பு சரணால் புரிய முடியாததாக இருந்தது.

"இப்போது இது சகஜம்."என்ற ராதிகா அப்பாவை அவள் அம்மா வேண்டாம் என்று சைகை செய்தாள்.

ஒரு பெண் பார்க்கும் படலத்தை ஒளிந்து ஒரு பெண் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வீட்டை விட்டு கிளம்பும் சமயம் எதிர்பாராமல் மாடியைப் பார்த்த சஃபாரி கண்கள் மலர்ந்தன.

"வர்ரோம்"

"பதில்"


"சீக்கிரம் வரும்"என்றான் பையன் மாடியைப் பார்த்துக் கொண்டே. 

இறைவன் போட்ட முடிச்சு. தெளிவாய் மனதில் இறங்கிய முதல் பதிவு.

அந்த வயதில் மாற்றுவது கடினம்.


(முற்றும்)


நா.நாகராஜன், 111/33E/1, ஸ்டேட் பேங்க் காலனி தூத்துக்குடி _628002. செல் 8778925252.      



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்