முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 20, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு

 தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் மகளீர் விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை சமூக நலன் மகளீர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் பார்வையிட்டார், மாவட்ட ஆட்சியர் மரு. கி , செந்தில்ராஜ் இ ஆ ப ,அவர்களும் ஆய்வு செய்தனர், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் , இ ஆ ப  மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்  வட்டாச்சியர்  ஜஸ்டின், ஆகியோர் உடன் உள்ளனர்

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள

    கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலையில் வார்டு 5, எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு வார்டு 6, சக்திவிநாயகபுரம், வார்டு 23, பிரமுத்து விளை வார்டு 19, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வார்டு ...

உண்டியலில் சேகரித்த தொகை : எம்.பி யிடம் வழங்கிய குழந்தைகள்.

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பணம் குளம் கிராமம் சடையின் கிணறு காலனி பகுதியை சேர்ந்த திரு இரட்டை முத்து திருமதி வளர்மதி தம்பதிகள் மகள் இன்பசுவாதி (வயது 9 ) மகன் விசாகன் (வயது 4 ) ஆகியோர் தனது உண்டியலில் சேகரித்த தொகையினை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களிடம் வழங்கினார்கள் அருகில் மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு .கி செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஊர்வசி ,அமிர்தராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உள்ளனர்

Kindly attend the zoom meeting webinar on 21.05.2021