டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக. கொரோனா கால. நிவாரண தொகுப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். -
19.07.2021 தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி நாராயணசுவாமி கோவிலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்க இன்று (19.07.2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார். அப்போது அவர்கள் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று 3ம் கட்ட பரவல் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கை...