23.12.2021. தூத்துக்குடிவட்டத்தில் கொலைமுயற்சி, போக்சோ மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. கடந்த 28.10.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜா (எ) புஷ்பராஜ் (32), த/பெ. ராமராஜ், வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்வர்களான 1) சின்னராசு (32), தஃபெ. முத்துபாண்டி, 2) சக்திமணி (22), தஃபெ. கணேசன், 3) முத்துபாண்டி (27), தஃபெ. கருத்தப்பாண்டி, 4) கார்த்திக் (எ) அட்ட கார்த்திக், 5) பொன்னுதுரை (27), தஃபெ. செண்பகவேல், மற்றும் 6) சரவணன், (34), தஃபெ. கனி ஆகிய 6 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான சக்திமணி மற்றும் பொன்னுதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !