தூத்துக்குடி 2020 மார்ச் 6 ; தூத்துக்குடி ரோட்டரி சங்கம் ரோட்டரி இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் பாசிடிவ் ஹெல்த் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் மனிதச்சங்கிலி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இம்மனிதச்சங்கிலியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை நர்ஸிங் கல்லூரி மாணவிகளும், புனித மரியன்னை கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரோக் மாரடைப்பு மற்றும் உடல் பருமன் பற்றிய பதாகைகளைக் கையில் வைத்துக் கொண்டு மாணவியர்கள் கைகோர்த்து நின்றார்கள். தொற்றா நோய்கள் பற்றிய கோஷங்களையும் மாணவியர் எழுப்பினர். மாணவியரோடு ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றம் முன்னாள் தலைவி உஷா கணேசன்;, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அருள்ராஜ் (முன்னாள் அகில இந்த...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !