முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 31, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதிய வாய்ப்பு

   தூத்துக்குடி மாவட்டத்தில் 2017, 2018 மற்ம் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  ---------------------------- 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை(டி) எண்.204, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 28.05.2021-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021 -க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத ப...

18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி  ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். ------------------------------ தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி  ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்  (31.05.2021)  அன்று நடைபெற்றது. இம்முகாமில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங், இ.கா.ப., மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் மாண்புமிக...