கொரோனா வைரஸ்பரவலைதடுப்பதற்குஇன்றுமுழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று மாவட்டம் முழுவதும்நேரில்சென்றுஆய்வு.தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (12.07.2020) ஒரு நாள்முழுஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய இரு ஞாயிற்று க்கிழமைகளிலும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று ஆய்வ...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !