முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 24, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.  ----------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில் இன்று (24.01.2022) நடைபெற்றது.   கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2022 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் சார்பில் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும்.  அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் ம...