கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழஙக வேண்டுகோள்
------------------------------------------------------------------------------------------------------------ கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் கடந்த 24.03.2020 முதல்30.06.2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும்,பொது இடத்தில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதற்கு மாறாக வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு முதன்முறையாக இருப்பின் காவல் துறையினர், மற்றும் உள்ளாட்சித்துறையினர் மூலம் ரூ.50ஃ-ம் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் ...