முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 12, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் வளர்ச்சித் துறையில் ரூ.10000- பரிசுத்தொகை

      தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும்; ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10000- பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர். மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பதோடு குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.  விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ்வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தினை நிறைவு செய்து, தாங்கள் பயிலும் பள்ளி ,  கல்லூரியிலிருந்து உரிய அனுமதிச் சான்றிதழ் பெற்று, 3 புகைப்படங்களுடன்...

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையை காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு .

 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப, அவர்கள் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.   ஓவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.  அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை இன்று (11.12.2021) திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் 2021ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார்.  அவருடன் தூத்துக்குடி   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உடனிருந்தார். அப்போது மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் உட்பட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.  பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Pயசயனந), ...