தமிழன்டா கலைக்கூட.ம் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக. ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட எஸ்.பி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஈரால் பகுதியில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். எட்டாயபுரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியான கீழ ஈரால், எப்போதும்வென்றான் தம்பாள்யூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் சுமார் 80 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக கொரோன ஊரடங்கு கால நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதை மேற்படி கலைக்கூடம் சார்பாக இன்று (22.05.2021) காலை எட்டையாபுரம் கீழ ஈரால் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ்...