முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 3, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகள்: போக்குவரத்து மாற்றம் - ஆட்சியர் தகவல்!

  தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகளில்  32 ராட்சஷ காண்கிரிட் தூண்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (நவ.2) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் செய்திக்குறிப்பு :  தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், திருச்செந்தூர் வஉசி துறைமுகம்,ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைபணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சஷ காண்கிரிட் தூண்கள் 32 எண்ணம் அதற்கான இடத்தில் பொறுத்தும் பணி மிகவும் முக்கியமானது ஆகும்.  மிகுந்த கவனத்துடன் இப்பணிகளை செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், தூத்துக்குடி திட்ட செயலாக்க பிரிவு முனைப்புடன் அதற்கான ஆயத்த பணிகளை செய்து மேற்படி  பாலம் 2023 பெப்ரவரி மாத்த்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில் இப்பாலம் அமைப்பதில் முக்கிய பணியான 32 தூண்களை பொறுத்தும் பணி 2.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெறவுள்ளது. •...

சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

  03.11.2022 சிறுபான்மையின                                மாணவ - மாணவியர்களுக்கு.            மத்திய அரசின் கல்வி உதவித்தொகை       விண்ணப்பிக்க கால நீட்டிப்பு          தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்             தமிழ்நாட்டில் வசிக்கும் இசுலாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய -  மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பள்ளி படிப்பு (ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை)பயிலும் மாணவஃமாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 15.11.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி- தொழில்நுட்பக்கல்வி) பயிலும் மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் 30-11-2022 வரை,...