முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 8, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் கொரானா தொற்று பாதுகாப்பு உப கரணங்கள்

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரின் உபயோகத்திற்காக  முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 317 பேர் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இந்த கொரோனா கால ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். ஆகவே தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் முகக்கவசம், என்.95 முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை ஊர்க்காவல் படையின் வட்டார துணை தளபதி திருமதி. கெசல்யா மற்றும் உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்து அனைவருக்கும் வழங்கும்படி உத்தரவிட்டார்.  இந்நிகழ்வின் போது தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் பாபு உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர். 

கொரோனா தொடர்பான தகவல்களை அறிய இணையதள சேவை துவக்கம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும்,  stopcoronatuti.in  இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கிவைத்தார்.  --------------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும்            stopcoronatuti.in  இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவை துவக்க நிகழ்ச்சி  இன்று (08.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள்  கலந்துகொண்டு இணையதள சேவையை துவக்கிவைத்து தெரிவித்ததாவது:- இணையதள சேவையில் பொதுமக்கள்    stopcoronatuti.in  இணையதளத்தில் தினசரி எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை விபரங்கள், கொரோனா தொற்று விபரங்கள் குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலிய...

ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தூத்துக்குடியில் ஆர்பாட்டம்

         8-6-2021  செவ்வாய்  அன்று தூத்துக்குடியில் 17வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக  அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது                                                                                                                                                       கொரோனா  தடுப்பு ஊசியை இலவசமாக வழங்கவும் , செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவும், ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டின் பங்கை வழங்கவும்,  உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை திரும்பப் பெறக் கோரி,     ஒன்றிய  அரசை வலியுறுத்தும் முகமாக ஆர்ப்பாட்ட...