ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை
ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் காவல் துறை காளிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை. இன்று தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான், இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் அனைவரும் தடுப்பூசி போட்;டுக்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந...