தூத்துக்குடியில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் --------------------------- தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் சிலை அருகில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.04.2022) தொடங்கி வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லோக பாலாஜி சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசுகையில் .... விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துற...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !