------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (11.03.2021) நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும்போது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க சொன்னதன் அடிப்படையில் 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீத...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !