முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 23, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டணம் வசூலிக்காமல் எப்படி தனியார் பள்ளிகளால் ஊதியம் வழங்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர்.   இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையில்கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஆன்லைன் மூலம...

மாலத்தீவிலிருந்து பிற மாநிலங்களைசார்ந்தவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறை முகத்திற்கு வருகை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA ல் மூலம் வருகை தந்;த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 198 நபர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.06.2020)  வரவேற்றார். பின்னர் பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கு  சாணிடைசர் வழங்கப்பட்டதையும், பயணிகளின் உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல்  வெப்பநிலை கண்டறிவதற்கு தெர்மல் ஸ்கிரினிங் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.    மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட  வாரியாக பிரித்து குடிவரவு நுழைவு மற்;றும் உடைமைகளை சோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:...