தூத்துக்குடி அமுதாநகர், கிருபைநகர் நடுரோட்டில் மூடி இல்லாமல், திறந்த நிலையில் கிடக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளால் உயிருக்கு ஆபத்து தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா ? திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் வால்வு தொட்டிகள் மூடி இல்லாமலும், சேதமடைந்தும் காணப்படுகின்றன இவற்றில் பல, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், பெரும்பாலான தொட்டிகளில் மேல்மூடி இல்லாத நிலையிலேயே கிடக்கிறது. மேலும் பல தொட்டிகள் உடைந்தும், சேதமடைந்தும் பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது. குறிப்பாக தெற்கு மண்டலத்தில் உள்ள, அமுதாநகர் 3வது தெருவில் (கிருபைநாதர் ஆலயத்திற்கு பின்புறம்) 2 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் வால்வு தொட்டி, மேல்மூடியே...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !