தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணி
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (17.10.2020) பக்தர்கள் இன்றி பொதுமக்கள் ஒத்துழைப்போடு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளரகள், நான்கு துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் 250 போலீசார் வீதம் 2 பிரிவாக (ளாகைவ) ஆக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் மற்றும் பத்தாம் நாள் திருவிழாவிற்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் வரவேண்டாம், இரண்டாவது நாள் முதல் முன்பதிவு செய்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 8000 பேர் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் 1300 தசரா குழுக்கள் உள்ளத...