எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் - போதைபொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு " மினி மராத்தான் "
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" (ENNAKUVENDAM NAMMAKUVENDAM & Say No To Drugs) என்ற அடிப்படையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்; போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று 22.01.2023 அன்றுகாலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாபெரும் "மினி மராத்தான்" போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். 6 பிரிவுகளில் நடந்த இந்த மினி மாராத்தான் போட்டியில் சுமார் 700 பேர...