முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 5, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

  கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்: நடிகர் பாண்டு காலமானார் பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். வயது 74.  கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது.

புதுவையின் புதிய முதல்வர் ரங்கசாமி கோவிலில் தரிசனம்

புதுச்சேரி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இன்று சேலத்தில் உள்ள தனது குருவான அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார் புதுவையின் புதிய முதல்வர் ரங்கசாமி. அப்போது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், புதிய அமைச்சரவை பட்டியலையும் சுவாமி சிலை முன்பாக வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்!

வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழா சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

.   தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் வழங்கினார்.  தூத்துக்குடி மாவட்டம் 3ம் மைல் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழா முன்னிட்டு இன்று (05.05.2021) தூத்துக்குடி 3ம் மைல் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் 3ம் மைல் மெயின்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி புதிய கட்டுபாடுகள் நாளை (06.05.2021) அதிகாலை 4 மணி முதல் 20.05.2021 அன்று அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தபட உள்ளது. ஏ...