தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை , மற்றும் வீரபாண்யபட்டிணம் பகுதியின் கடல் அலை அரிப்பு தடுப்பு சுவர் நீட்டிப்பு கட்டுமான பணி : மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும் வீரபாண்டியன்பட்டணத்தில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார் --------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும் வீரபாண்டியன்பட்டணத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்;ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2020) நடைபெற்றது. கட்டுமான பணிகளுக்கான பூமி நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆ...