தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக, ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடிவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் அன்று (08.01.2022) ஒமைக்ரான்; கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்க...