முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 14, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கராத்தே கருப்பு பட்டைய தேர்வு

    தூத்துக்குடி மாவட்ட    நாசரேத்தில் கராத்தே கருப்பு பட்டைய தேர்ச்சி போட்டி ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக  கராத்தே கருப்பு  பட்டைய தேர்வு போட்டி   கடந்த 13-07-2025 ஞாயிறு கிழமை  அன்று   நடைபெற்றது.  ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக  நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி  கராத்தே கருப்பு பட்டயமும் சான்றிதழும் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பெரியதுரை, ஜான், மாஸ்டர் சபரி, குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.

இன்று சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கம்

      மனித உரிமைகள் கழகத்தின் கௌரவ ஆலோசகர் டாக்டர் எஸ்.அய்யாதுரை பாண்டியன் அவர்கள் இன்று சங்கரன்கோவிலில் ஏ வி கே பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கினார்.    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழக நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்; என் சந்திரசேகர்.  கல்லூரியின் துணைத் தலைவர் திருமதி அல்லிராணி அய்யாதுரை பாண்டியன் கல்லூரி முதல்வர் டாக்டர் பி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்   இவ்விழாவில் நமது கழக மாநில கமாண்டோ பிரிவு செயலாளர் முருகன், திருநெல்வேலி மாவட்ட மகளிர் அணி தலைவி இசக்கியம்மாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ் அருண் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்

தூத்துக்குடியில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா

  தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.     13-07-2025 ஞாயிற்று கிழமையன்று தூத்துக்குடி ஆயர் இல்ல இளையோர் அரங்கில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், அருட்தந்தை செல்வராசு தலைமை வகித்தார். பணி நிறைவு தமிழாசிரியர் புலவர் முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.  தூத்துக்குடி கவிஞர் நெல்லை தேவனின் 'வலிகளின் ஊர்வலம்' என்ற கவிதைத் தொகுப்பு நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் அறம் வெளியிட,தமிழ்ச் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் பெற்றுக் கொண்டார். தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் மற்றும் திருச்சி எழுத்தாளர் ஏகரசி தினேஷ் ஆகியோர் நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினர்.      பணிநிறைவு ஆசிரியர் அல்பர்ட், பணி நிறைவு நெடுஞ்சாலைத்துறை கவிஞர் செல்வராஜ், பணிநிறைவு வங்கி மேலாளர் மாணிக்கவாசகம், இலக்கிய ஆர்வலர் லாரன்ஸ், தமிழ்...