தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காயல்பட்டிண த்தில் கொரோணா வைரஸ் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீh வழங்கப்பட்டது. 01.08.2020 அன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின் அங்கிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இந்த மூன்றை கடைபி...