தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு வங்கியின் விவசாய உள்கட்டமைப்பு நிதி தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு . ஆட்சியர் தகவல்
------------------------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நபார்டு வங்கியின் விவசாய உள்கட்டமைப்பு நிதி தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் இன்று (03.09.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் அறிவிப்பிற்கினங்க மத்திய நிதி அமைச்சர் அவர்களால் ரூ.1இலட்சம் கோடி மதிப்பில் இந்திய அளவில் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்த நிதி நிர்ணயிக்கப்பட்டு, அதில் தமிழகத்திற்க்கு இத்திட்டதில் ரூ.5990 கோடி நிதி இலக்கு நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபடவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் நிதியை பெறுவதற்கு...