முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 3, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டு

           தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது  - ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையற்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (62) என்பவர் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் 5  மோதிரம், ஒரு கைச்செயின் மற்றும் ஒரு இரண்டு வடச்செயின் ஆகியவற்றை 15.05.2020 அன்று யாரோ வீடு புகுந்து திருடிச் சென்று விட்டதாக  16.05.2020 அன்று பிச்சையம்மாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ம...