"அப்பாவின் இரண்டாவது மரணம்" நூல் வெளியீட்டு விழா... கடந்த சனிக்கிழமை(28.10.23)மாலை 04.00 மணிக்கு நாசரேத்தில் தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதி எமது காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்ட "அப்பாவின் இரண்டாவது மரணம்"என்ற சிறுகதை நூல் வெளியிடப்பட்டது. விழாவிற்கு மேனாள் தமிழ்ப்பேராசிரியர் மா.காசிராசன் அவர்கள் தலைமை தாங்கினார். தொழிற்சங்கத் தலைவர் ஈ.கிருஷ்ணராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் நா.இராமச்சந்திரன் அவர்கள் நூலை வெளியிட தொடுவானம் இதழின் ஆசிரியர் நெல்லை தேவன் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார் த.க.இ.பெ.ம. மாநிலச்செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் நூலை அறிமுகம் செய்துவைக்க...தூத்துக்குடி மாவட்ட க.இ.பெ.ம தலைவர் அருட்சகோதரி மீ.சு.எழிலரசி,எழுத்தாளர் சொ.பிரபாகரன்,தூய சவேரியார் கல்லூரி து.பேராசிரியர்-ஜே.பி.ஜோஸ்பின் பாபா,ஏரல் லோபா பள்ளி தாளாளர் முருகன் ஆகியோர் நூல் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் ஏற்புரை வழங்கினார்.இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் நன்றி...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !