தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின்பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்களை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விரட்டிப்பிடித்து கைது - ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயின் மீட்பு - கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. ஆறுமுகநேரி குருஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர் மனைவி ரோஸ்மேரி என்பவர் நேற்று (19.04.2021) தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணைவிளை மொட்டையாசாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நம்பர் பதிவு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காண்பித்து மிரட்டி ரோஸ்மேரியின் கழுத்திலிருந்த 3 ¼ சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில் உடனடியாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, ஆங்காங்கே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்துப் பணியிலிர...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !