காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு
இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் காரணங்கள் கேட்டறிந்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, கபசுரக்குடிநீர் வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி ...