முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

  தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது -  2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.06.2021) தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், திருமதி. சரண்யா, தலைமைக் காவலர் திரு. முத்துராஜ், முதல் நிலைக் காவலர் திரு. பாலக்குமார், காவலர்கள் திரு. சிலம்பரசன் மற்றும் திரு. ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் ந...

" நான் கொரோனா பேசுகிறேன் ''... கவிஞர் ஆ.மாரிமுத்துவின் கொரனோ விழிப்புணர்வு கவிதை

  நான்  கொரோனா  பேசுகிறேன்.... எனது பிறப்பினை தேடித் தேடி உனது இறப்பினை அடையும்  ஆறறிவு மனிதா நான் கொரோனா பேசுகிறேன் கேள் ! வாழும் உடல்  தேடி அலையும் உயிர்க் கொல்லி நான் ! மனித உடலில் எனை பரப்பும் மாயசக்தி நான் ! உனை நாடாதிருக்க  நீ  கூடாதிரு உனை கொல்லாதிருக்க கூடி நில்லாதிரு உயிரைக்  கொல்வது நோக்கமல்ல உடலெங்கும் பரவி வாழ்வதே ஏக்கம்  ! எனை ஏற்கும் சக்தியிருந்தால் அந்த  சக்தி  பெறும் வழி தெரிந்தால் நீ வாழ்வது நிச்சயம்  நான் வீழ்வது சத்தியம் ..... புத்தனவன் போதனைகள் புதைத்து  விட்டாய் சித்தர்களின் சிந்தனைகள்  சிதறி விட்டாய் செத்தவர்கள் கண்டு பதறும் நீ இப்பொழுதாவாது புதைத்ததை தோண்டியெடு சிதறியதை கூட்டி அள்ளு பாட்டி சொன்ன வைத்தியம்  பாட்டியோடு போவதற்கல்ல என்னோடு போட்டி  போடுவதற்கே உன் உடலில்  வாழப்போவது நீயா  இல்லை நானா ? வீட்டிலிரு விலகியிரு நீ விளைத்த தானியம் மட்டுமே  விழுங்கியிரு உடலால்  தனித்திரு உள்ளத்தால் கூடியிரு ஆதிக்குடி தமிழா மண்ணை நேசி உன் மண்ணில்  விளைந்ததெல்லாம் ருசி புசி உப...