. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொராணா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு ------------------------ கொராணா என்ற வைரஸ் நோய் உலகளாவிய கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டு, அதன் தடுப்பு நடவடிக்கைகளை அரசு சீறிய முறையில் எடுத்துவருகினற்து. தற்பொழுது கொராணா நோய் தடுப்பின் ஒரு அங்கமாக 18 வயதினருக்கு மேற்பட்டோருக்கு அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இத்தடுப்பூசியை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள இம்மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர். ...