முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 5, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெயிலில் பணி செய்யும் காவலர்களுக்கு மோர் லெமன் ஜீஸ்

                   வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலம் முழுவதும் நீர்,மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் இன்று காலை 10.15 மணிக்கு தென்பாகம் காவல் நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் லெமன் ஜுஸ் போன்ற பாணங்கள் காவல் துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.

ஆயிரம் மெகா வாட் மின் நிலையம் நாட்டிற்கு அர்பணிப்பு

         ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்டடது.                      04-03-2019  திங்கள் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு கழகமும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட வ.உ.சி துறை முகம் அருகில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில்  மின்சார உற்பத்தி செயல்பாட்டிற்கு  பின் இன்று மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்  திரு.பியூஸ் கோயல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார்" மேலும் விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்   மாவட்டத்தில் என் .எல்.சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  150 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தையும் இந்த நிகழ்ச்சியோடு நாட்டிற்கு அர்பனிக்கப்பட்டது.                                      இந்த நிகழ்ச்சிக்கு   மத்திய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமண...