மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கி வருகிறது. படித்த வேலைவாயப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , (PMEGP) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இம்மூன்று திட்டங்களிலும் மகளிருக்கு 50சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தையல் தொழில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், உணவுப் பொருட்கள் பதப...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !