முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 28, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அளவிலான சிலம்ப போட்டி : மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி

  24 -07-2022 அன்று     மாநில அளவிலான சிலம்ப போட்டி   விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது   200க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநில அலைிலான இந்த போட்டியில் மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்  தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்ப சண்டை பிரிவில் இரண்டாவது பரிசை முத்துராஜ், ஆல்ட்ரின், யூதா ஆகியோர்கள் வென்றனர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் கராத்தே டென்னிசனையும் பள்ளி  தாளாளர் செல்வின், பள்ளி தலைமையாசிரியர் குணசீலன் பள்ளி, ஆசிரியர் அமிர்தராஜ், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ஏஞ்சல் மற்றும் கலந்து கொண்டு பாராட்டினர்.

44வது சர்வதேச சதுரங்க போட்டி : தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துவக்க விழா ஜோதி

   சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வரவேற்றார்கள். -------------------------- சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.07.2022) வரவேற்று பேசியதாவது:   சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்கு மிகத் துல்லியமாக திட்டங்கள் தீட்டி குறுகிய காலத்த...

தூத்துக்குடியில் மாலை தோரும் சூழும் கரு மேகங்கள்

  தமிழ்நாட்டில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது  அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது ...குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் மாலை நேரம் தொடங்கியவுடன் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வெயிலை குறைத்து வெட்கையை தணித்து குளிர்ந்த காற்றுடன் இதமான மழைபெய்கிறது  இந்த சூழல் இருக்கும் இடத்தில் இருந்து குற்றால சூழலை உணர்த்துகிறது