முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 14, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி நகருக்கு வெளியே காய்கனி மார்க்கெட் இடமாற்றம் : ஆட்சியரிடம் கோரிக்கை

தூத்துக்குடி நகருக்கு வெளியே காமராஜர் காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மக்கள் மேம்பாட்டு கழகம், அமைப்பாளர் வழக்கறிஞர் இ.அதிசயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், மக்கள் மேம்பாட்டு கழகம் அமைப்பின் அமைப்பாளராகவும் இருந்து சமூகப் பணிகள் செய்து வருகின்றேன். தூத்துக்குடி மாநகரத்திற்குள் வரக்கூடிய பாளை ரோட்டின் அருகில் காமராஜர் காய்கனி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் காய்கனி மொத்த கொள்முதல் சந்தையானது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. தற்போது கடந்த   மார்ச் மாதத்திலிருந்து Covid19 தொற்றுநோயானது உலகம் முழுவதும் பரவி வருவதினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று சுகாதாரத்துறையின் உத்திரவின் அடிப்படையில் மேற்படி மார்க்கெட் மூடப்பட்டு, அங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு மாநகராட்சியின் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு பழைய பேருந்துநிலையம் மற்றும் வ.உ.சி. கல்லூரி அருகில் மொத்த கொள்முதல் வியாபா...