தூத்துக்குடியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை நிறைவேற்றி இருந்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆணையர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !